உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 3-1 கோல் கணக்கில் வெற்றி பெற்று அர்ஜெண்டினா அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.
அனைத்துலக கால்பந்து கூட்டமைப்பான பிபா சார்பில் நடத்தப்பட்டு வரும் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி தொடரில் லீக் சுற்று, 2ஆவது சுற்று போட்டிகள் (நாக்-அவுட் சுற்றுகள்), 3ஆவது சுற்று போட்டிகள் முடிந்து, காலிறுதி போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.
அந்த வகையில், காலை 6.30 மணிக்கு அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி நகரில் உள்ள கான்சாஸ் மைதானத்தில் நடந்த காலிறுதி போட்டி ஒன்றில் அர்ஜெண்டினா, சுவிட்சர்லாந்து அணிகள் விளையாடின.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் முதல் கோலை போட்டார். தொடர்ந்து போட்டியின் முதல் பாதி முடியும் வரை வேறு கோல்கள் அடிக்கப்படவில்லை. இதனால், 1-0 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணி முன்னிலையில் இருந்தது.







