பணம் கொடுத்தால் தான் வேலை என்ற பேச்சுக்கே இனி இடம் இல்லை- அமைச்சர் ஆனந்த்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் 2-ம் மாநில மாநாட்டின் பொதுமாநாடு நடைபெற்றது.இதில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-உலகத்திலேயே தூய்மை பணியாளர்கள் போல் சேவை செய்திட யாரும் இல்லை. யாரும் இருக்க மாட்டார்கள். கைதட்டுவதற்காக இதை சொல்லவில்லை. தூய்மை பணியாளர்களுக்கு கடந்த காலத்தில் நலத்திட்டங்களை செய்திட ஏன் மனசு வரவில்லை என்று தெரியவில்லை. ஆனால் இப்போது முதல்-அமைச்சர் விஜய் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிப்பார்.தலைவர் முகத்துக்காகத்தான் அனைத்து மக்களும் ஓட்டு போட தயாராக இருக்கிறார்கள் என்று சொல்லி இன்று வெற்றி பெற்று இருக்கிறோம். சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஒரு போதும் தவறு செய்ய மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏழை மக்கள் மீது எப்போதும் பரிவு காட்டும் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. தொழிலாளர்களுக்காக போராடும் கட்சி. எளிமையானவர்கள் நிறைந்த கட்சி. இதேபோல் தமிழக வெற்றிக்கழகமும் ஏழை எளிய மக்களுக்கான கட்சிதான். இனிமேல் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட வேண்டிய அவசியம் இருக்காது. அது கடந்த ஆட்சி காலம். இப்போதுள்ள முதல்வர் ஏழை மக்களுக்கானவர். கம்யூனிஸ்ட் கட்சி என்றாலே போராட்டம் தான் என்பார்கள். ஆனால் இனி அப்படியான நிலை இருக்காது.தூய்மை பணியாளர்கள் தங்களின் நிலையை சொல்லும் போதே கஷ்டமாக இருந்தது. அனைவருக்கும் சொல்கிறேன். உங்கள் முதல்வர் உங்களை கண்டிப்பாக கைவிட மாட்டார். லஞ்சம் பெறாமல் இருந்தாலே செழிப்பாக இருப்போம். இனி லஞ்சமே இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here