தகவல் தொடர்பு அமைச்சக அதிகாரி முகமட் ஃபரிட்சால் காலமானார்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் ஆழ்ந்த இரங்கல்!

கோலாலம்பூர்:

லேசியத் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ மற்றும் நிறுவனத் தகவல் தொடர்புப் பிரிவின் பொது உதவியாளரான முகமட் ஃபரிட்சால் ரெடுவான் நேற்று காலமானதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்துத் தனது அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில், “முகமட் ஃபரிட்சால் ரெடுவான் மிகவும் நல்ல குணமும், பணியில் மிக்க அர்ப்பணிப்பும் கொண்டவர். அமைச்சக ஊழியர்கள் அனைவராலும் விரும்பப்பட்ட ஒருவரை நாம் இழந்துவிட்டோம் என்ற செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஃபரிட்சால் முன்னதாக அமைச்சரின் அலுவலகத்திற்கு உதவி புரிய நியமிக்கப்பட்டிருந்ததை நினைவுகூர்ந்த அவர், இவரது மறைவு தகவல் தொடர்பு அமைச்சக ஊழியர்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும் என்றார்.

மறைந்த முகமட் ஃபரிட்சாலின் ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அமைதியும் ஆறுதலும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக அமைச்சர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here