சிலாங்கூர், ஜோகூர் உட்பட 5 மாநிலங்களுக்குக் கனமழை எச்சரிக்கை: மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்யும்!

கோலாலம்பூர்:

மலேசியாவின் 5 மாநிலங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை, கனமழை மற்றும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று காலை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், பெர்லிஸ், கெடா, பேராக், சிலாங்கூர் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்கள் இந்த வானிலை எச்சரிக்கைக்கு உட்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வானிலையை எதிர்கொள்ளும் முக்கிய மாவட்டங்களளாக, கெடா: லங்காவி, குபாங் பாசு மற்றும் கோத்தா ஸ்டார், பேராக்: கெரியான், லாரூட், மாத்தாங், செலாமா, மஞ்சோங் மற்றும் பாகான் டத்தோ,
சிலாங்கூர்: சபாக் பெர்னம், கோலா சிலாங்கூர் மற்றும் கிள்ளான் மற்றும் ஜோகூர்: பொந்தியான், கூலாய், ஜோகூர் பாரு மற்றும் கோத்தா திங்கி ஆகியவற்றை அது குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்டப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு அல்லது சூறாவளிக் காற்று காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here