மணிலா, தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில், 14 வயதுடைய இரண்டு மாணவர்களும், துப்பாக்கிச் சூடு நடத்திய இளம் வயது நபரும் உயிரிழந்தனர். மேலும், குறைந்தது 10 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அரசாங்கம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு கோட்டாபட்டோ பகுதியில் அமைந்துள்ள பங்கா தேசிய உயர்நிலைப் பள்ளியில் இன்று துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த இளைஞர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்த தொடங்கினார். இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.








