தம்பூன் பகுதியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வயதான தம்பதியினரும் பேரனும் உயிரிழந்தனர்

ஈப்போ: இன்று அதிகாலை ஈப்போவில் உள்ள ‘தாமான் டேசா தம்பூன்’ (Taman Desa Tambun) பகுதியில் அமைந்துள்ள இரட்டை மாடி வரிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், முதிய தம்பதியினரும் அவர்களது பேரனும் உயிரிழந்தனர். காலை 4 மணிக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, தம்புன் மற்றும் ஈப்போ தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகப் பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குனர் சயானி சைடோன் தெரிவித்தார்.

அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றொருவரான 47 வயதுடைய ராஜா இக்வான் ஹாதி ராஜா அகமது, வளாகத்திலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் தூங்கிக்கொண்டிருந்ததாகக் கருதப்படும் நிலையில், எவ்விதக் காயமும் இன்றித் தப்பினார்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​வீட்டின் 70 சதவீதப் பகுதி தீயில் எரிந்து கொண்டிருந்ததாக சயானி தெரிவித்தார்.

ராஜா அகமதுவின் உடல் தரைத்தளத்தில் உள்ள குளியலறையிலும், மற்ற இருவரின் உடல்கள் மேல் தளத்திலும் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். உயிரிழந்தவர்கள் ராஜா அகமது ராஜா அலி (70), சைதுன் முகமது (64) மற்றும் நிக் அப்துர்ரஹ்மான் அஜிமின் ஹாரித் ஹெலால் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here