மலாக்கா தேர்தல் களம் சூடுபிடித்தது:அஸ்மான் அபிடினுடன் ஹங் ஜெபாட் மையத்திற்கு வந்த அமிருடின் ஷாரி!

கோலாலம்பூர்,

அக்டோபர் 31: மலாக்கா மாநிலத் தேர்தலில் பாயா ரும்புட் (Paya Rumput) சட்டமன்றத் தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகக் களமிறங்கும் டத்தோ அஸ்மான் அபிடின் (Datuk Azman Abidin), இன்று காலை ஹங் ஜெபாட் ஸ்டேடியத்தில் அமைந்துள்ள (Stadium Hang Jebat) வேட்புமனுத் தாக்கல் மையத்திற்கு வருகை தந்தார்.

அவருக்கு உற்சாகமூட்டும் வகையில், சிலாங்கூர் மந்திரி பெசார் மற்றும் பிகேஆர் (PKR) கட்சியின் துணைத் தலைவருமான டத்தோ Seri அமிருடின் ஷாரியும் (Datuk Seri Amirudin Shari) வேட்புமனு தாக்கலில் கலந்து கொண்டார்.

இதனிடையே, அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர்களின் எழுச்சிமிகு முழக்கங்களுக்கும் ஆரவாரங்களுக்கும் இடையே, வேட்புமனுத் தாக்கல் மிகச் சிறப்பான முறையில் தொடங்கியது.

மலாக்கா தேர்தலில் இத்தொகுதியில் நிலவும் போட்டி, அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here