தனியார் மருத்துவமனைகள் பில்லியன் ரிங்கிட் வருவாய் ஈட்டி தரும் மருத்துவ சுற்றுலாவை திரும்பப் பெறும் என்று நம்புகின்றன

மலேசியாவின் தனியார் மருத்துவமனைகள் சங்கம் (APHM) மருத்துவ சுற்றுலாவை விரைவில் தொடங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. அதன் பொருளாதார நன்மைகள் மற்றும்         கோவிட் -19  தொற்றினை கையாளும் தனியார் வசதிகளின் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த அழைப்பினை விடுத்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் சுமார் 1.22 மில்லியன் மருத்துவ சுற்றுலா பயணிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இது சுமார் 1.7 பில்லியன் வெள்ளி வருவாயை ஈட்ட முடிந்தது என்று மலேசியா ஹெல்த்கேர் டிராவல் கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஒரு அறிக்கையில், ஏபிஎச்எம் தலைவர் டாக்டர் குல்ஜித் சிங், அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் மலேசியாவில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மருத்துவ சுற்றுலா பயணிகளை ஏற்றுக்கொள்ளும் மற்றும் சிகிச்சை அளிக்கும் முறை அனுமதிக்கப்பட்டவுடன் நாடு தனியார் மருத்துவமனைகளின் வருவாயை அதிகரிக்கும்.

மருத்துவமனை வளாகத்திற்குள் மருத்துவ சுற்றுலா பயணிகளுக்கு சிகிச்சை அளிப்பது பாதுகாப்பாக இருக்கும் என்று நாங்கள்  உணர்கிறோம். குறிப்பாக இப்போது கோவிட் -19 உள்ள உள்ளூர் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று அவர் கூறினார்.

குல்ஜித், தனியார் மருத்துவமனைகள் அடுத்த கட்ட தடுப்பூசிகளுக்கு உதவ தயாராக உள்ளன. இதில் இளைஞர்கள் மற்றும் மூன்றாவது டோஸ் தேவைப்படும் என்று கருத்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here