கோலாலம்பூர்:
செர்டாங், ஸ்ரீ கெம்பாங்கான், ஜாலான் அங்கீரிக் புலு வாட்டர் எஸ்டேட் வட்டச் சாலை அருகே உள்ள புல் மூடிய பகுதியில், ஆடையின்றி ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 25 முதல் 30 வயதுக்குள் உள்ள மூன்று ஆண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை தடுப்புக் காவலில் வைப்பதற்கான விண்ணப்பத்தை போலீஸ் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக செர்டாங் போலீஸ் தலைவர் முகமட் ஃபாரிட் அகமட் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. சவப்பரிசோதனைக்கு முன், அவரை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மலேசிய குற்றவியல் சட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பவம் குறித்த தகவல் அறிந்துள்ள பொதுமக்கள் உடனடியாக 03-8074 2222 என்ற எண்ணில் செர்டாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு போலீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.





















