கார்த்திகை மாதத்தில் வரக் கூடிய பரணி நட்சத்திரம் அன்று வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது, பரணி தீப வழிபாடாகும். இந்த உலகில் நாம் வாழும் காலத்தில் மட்டுமின்றி, மேல் உலகிலும் நமக்கு அளவில்லாத நன்மைகளை தரக் கூடியது பரணி தீபம் வழிபாடு ஆகும். பொதுவாகவே கார்த்திகை விரதம் இருப்பவர்கள் பரணி நட்சத்திரத்திலேயே விரதத்தை துவக்கி விட வேண்டும் என்பது நியதி. கார்த்திகை மாதத்தில் பரணி, கார்த்திகை ஆகிய இரண்டு நட்சத்திரங்களிலும் விரதம் இருப்பது சிறப்பானதாகும். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும், உயர் பதவியை பெற வேண்டும் என்பவர்கள் இந்த இரண்டு நாள் விரதத்தை கடைபிடிக்கலாம்.
பரணி நட்சத்திரம் வரும் நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, விரதத்தை துவக்கி விட வேண்டும்.- நாள் முழுவதும் உபவாசமாக விரதம் இருப்பது நல்லது. அப்படி முடியாதவர்கள் பரணி நட்சத்திரம் வரும் நாளில் காலையில் மட்டும் உணவு எடுத்துக் கொள்ளலாம்.- பரணி அன்று பகல் மற்றும் இரவில் பால், பழம் ஆகியவை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.- மறுநாள் கார்த்திகை அன்று முழுவதுமாக உபவாசமாக இருந்து விரதம் இருக்கலாம்.- இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருக்க முடியாது என்பவர்கள் கார்த்திகை அன்று எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
பரணி நட்சத்திரத்திற்குரிய கடவுள் சுக்கிரன்; அதிதேவதை எமதர்மராஜா. நம்முடைய காலமான முன்னோர்கள் யமலோகத்தில் எந்த விதமான யம வாதனை எனப்படும் துன்பங்களை சந்திக்காமல் இருக்கவும், நாமும் எந்த விதமான யம வாதனையும் இல்லாமல் இருக்கவும் கார்த்திகை மாத பரணி அன்று பரணி தீபம் ஏற்றுகிறோம். துன்பம் இல்லாத மரணமும், மோட்சமும் பெற வேண்டும் என்பதற்காகவும், நம்முடைய முன்னோர்களும் அவர்கள் செய்த பாவங்களில் இருந்து விடுபட்டு, நற்கதியை பெற்று, முக்தியை அடைவதற்கும், திருக்கார்த்திகைக்கு முந்தைய நாள் எமதர்மராஜாவை வேண்டி பரணி தீபம் ஏற்ற வேண்டும்.
பரணி தீபம் அன்று வீட்டு வாசலில் மட்டுமின்றி வீடு முழுவதும் விளக்கேற்ற வேண்டும். கார்த்திகை மாதம் முழுவதும் வீட்டு வாசலில் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவோம். பரணி அன்று அந்த விளக்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நாளாகும். திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி அன்றே வீடு முழுவதும் விளக்கேற்ற துவங்கி விட வேண்டும். வீட்டு வாசல், நிலைவாசல், பூஜை அறை என அனைத்து இடங்களிலும் விளக்கேற்ற வேண்டும்.
ஒரு தாம்பாலத்தை எடுத்துக் கொண்டு, அதில் ஐந்து அகல் விளக்குகளை வெளிப்புறமாக பார்த்த படி ஏற்ற வேண்டும்.- ஒவ்வொரு விளக்கும் ஒவ்வொரு திசையை நோக்கி இருக்கும் படி ஏற்ற வேண்டும்.- ஒவ்வொரு தீபத்திற்கு முன்பும் ஒரு மலர் வைத்து, வட்ட வடிவமாக தீபங்களை ஏற்ற வேண்டும்.- ஐந்து விளக்குகளும் நெய் விளக்காக ஏற்ற வேண்டும். நெய் விளக்கு மகாலட்சுமியின் அருளை வீட்டில் அதிகரிக்கச் செய்யும். அஷ்டலட்சுமிகளின் அருளையும் ஈர்க்கும்.- இந்த ஐந்து விளக்குகளும் இறைவனின் பஞ்சபூத தத்துவத்தை விளக்குவதாகும்.
ஐந்து விளக்குகளையும் ஏற்றி, அந்த தாம்பாலத்தை அப்படியே பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.- இந்த ஐந்து விளக்குகள் தவிர்த்து பூஜை அறையில் வழக்கமாக ஏற்றக் கூடிய விளக்குகளை ஏற்ற வேண்டும்.- இது தவிர வீட்டு வாசல், மாடி, மாட்டுத்தொழுவம் இருந்தால் அங்கு விளக்கு வைக்கலாம், துளசி மாடம், கிணற்று மேடு என அனைத்து இடங்களிலும் விளக்கேற்ற வேண்டும்.- விளக்கேற்றி சாமிக்கு நைவேத்தியமாக பால், பழம் அல்லது ஏதாவது இனிப்பு செய்து படைக்கலாம்.
நவம்பர் 23 திங்கள்பரணி நட்சத்திரம் துவக்கம் – நவம்பர் 23 அதிகாலை 03.20பரணி நட்சத்திரம் நிறைவு.























