இந்தியா, கர்நாடகாவின் பவர் டிவி சௌந்தர்யா என்று பெயர்சூட்டப்பட்டுள்ள ஒரு எந்திரபெண்ணை செய்தி வாசிப்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த எந்திரப் பெண்ணை செய்தி வாசிக்கப் பயன்படுத்துவதோடு நின்றுவிடாமல் மற்ற நிகழ்ச்சிகளையும் படைக்கவைக்க அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது.
முன்னதாக சில நாள்களுக்கு முன்னர், ஒடிசா மாநிலத்தின் செய்தி நிறுவனம் ஒன்று ‘லிசா’ என்ற பெயரில் ஒரு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திலான எந்திரப் பெண்ணை, செய்தி வாசிப்பாளராக அறிமுகப்படுத்தி வந்தது.

ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய கைத்தறிப் புடவையைக் கட்டிக்கொண்டு ஒடிசா மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் செய்தி வாசிக்கும் திறன் படைத்தவராம் இந்த லிசா என்ற எந்திரப்பெண்.
இப்போது கன்னட மொழி பேசும் எந்திரப் பெண் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இந்த தொழில் நுட்பம் மக்கள் மத்தியில் எவ்வாறு வரவேற்பை பெறுகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





















