முதியவரைத் தாக்கிய சாலை வன்முறைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

கோலாலம்பூர்:

ஜாலான் பாசிர் பாஞ்சாங், லோரோங் இக்வான் பகுதியில் நேற்று மாலை நிகழ்ந்த சாலை வன்முறைச் சம்பவம் தொடர்பாக மூன்று ஆடவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

39 முதல் 44 வயதுக்குட்பட்ட உள்ளூர் ஆடவர்கள் மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கோல திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அஸ்லி முகமட் நூர் தெரிவித்தார்.

நேற்று மாலை சுமார் 5 மணியளவில் இரண்டு வாகனங்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து கைகலப்பு ஏற்பட்டதாகப் புகார் கிடைத்ததாக அவர் கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“ஆரம்பகட்ட விசாரணையில், பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற ‘ஸ்கோடா’ ரக காரின் பின்பகுதியில் ‘பெரோடுவா அல்சா’ கார் மோதியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ஸ்கோடா காரில் பயணித்த அந்தப் பெண்ணின் கணவரான 62 வயது முதியவர், காரின் சேதத்தைப் பார்ப்பதற்காக வெளியே இறங்கியுள்ளார்.

அப்போது, பெரோடுவா அல்சா காரில் இருந்த நபர்கள் ஆக்ரோஷமாகச் செயல்பட்டு அம்முதியவரைத் தாக்கியுள்ளனர்.

கைகளால் குத்தியும், முழங்கையால் இடித்தும், காலால் உதைத்தும் அவர்கள் தாக்கியதில், அம்முதியவரின் முகம், மூக்கு மற்றும் வாய் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.”

மேலதிக விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட மூவரையும் தடுப்புக் காவலில் வைக்கக் கோரி, நாளை கோல திரெங்கானு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அஸ்லி மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here