மழுங்கிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டதில் ஆடவர் உயிரிழப்பு: கொலை வழக்காகப் பதிவு செய்து போலீஸ் விசாரணை

கோலாலம்பூர்:

நிபோங் தெபால், ஜாலான் பைராம் பகுதியிலுள்ள கம்போங் பாருவில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்ட ஆடவர், மழுங்கிய ஆயுதத்தால் (Blunt object) தலையில் பலமாகத் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

செபெராங் ஜெயா மருத்துவமனையில் இன்று நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளதாக, தென் செபெராங் பிறை மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பிரண்டென்ட் ஜே ஜனவரி சியோவௌ கூறினார்.

உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் (கொலை) கீழ் இவ்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கொலைக்கான பின்னணியைக் கண்டறியவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது,” என அவர் இன்று தெரிவித்தார்.

முன்னதாக, ஜாலான் பைராம் கம்போங் பாரு பகுதியில் ஆடவர் ஒருவரின் சடலம் கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here