கனடாவின் நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த சரக்கு கப்பல்

கனடாவின் நடுக்கடலில் கப்பல் தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கடற்பகுதியில் ரசாயனங்களை ஏற்றிச் சென்ற கப்பல் திடீரென நடுக்கடலில் தீப்பிடித்துக்கொண்டது.

இதையடுத்து கப்பலில் இருந்து விஷ வாயுக்கள் வெளியேறின. பின்னர், இச்சம்பவத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை அமெரிக்க கடலோர காவல் படையினருடன் இணைந்து ஆராய்ந்து வருவதாக கனடா கடலோரப் படையினர் தெரிவித்துள்ளனர்.

எம்வி ஜிம் கிங்ஸ்டன் எனப்படும் இந்தக் கப்பலில் தீப்பிடித்ததை தொடர்ந்து 16 கப்பல் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், ஐந்து பேர் கப்பலிலேயே தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

கப்பலில் தீப்பிடித்தபோது 10 கண்டய்னர்கள் எரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் தீ வேகமாக மற்ற இடங்களுக்கும் பரவியது. ஆனால் ஒட்டுமொத்த கப்பலும் தீப்பிடிக்காததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

கடலில் விழுத 40 கண்டய்னர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கண்டய்னர்களில் அபாயகரமான ரசாயனங்கள் இருப்பதால் கடலில் பயணிப்போருக்கு பெரும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here