பெந்தோங்கில் திடீர் வெள்ளம்!

பெந்தோங், மார்ச் 18:

நேற்று மாலை 5 மணி முதல் பெய்த கனமழையால் பெந்தோங் நகரம் மற்றும் அதன் அருகிலுள்ள பல கிராமங்களும் நேற்றிரவு திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செய்தித் தொடர்பாளரின் கருத்துப்படி, சுங்கை பெனாஸ் ஆற்றுநீர் அதிகமாகி சாலையைக் கடந்ததால், கம்போங் கெமசூர் பகுதி வெள்ளத்தில் மூழ்கியது.

“ஒரு குழந்தை உட்பட மொத்தம் ஐந்து ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் அப்பகுதியில் நடந்த ரோந்துப் பணியின் போது, இயந்திரங்களைப் பயன்படுத்தி மீட்கப்பட்டனர்.

“பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது பகுதியைவிட்டு வெளியேற்றப்பட வேண்டியிருந்தால், அவர்களுக்கு உதவி செய்வதை உறுதிப்படுத்த, பணியில் உள்ள பணியாளர்களின் கண்காணிப்பு அப்பகுதிகளில் அவ்வப்போது தொடர்கிறது,” என்று அவர் வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், சுங்கை பெஞ்ஜூரிங் அருகே கம்போங் பெர்டிங், கம்போங் ரெபாஸ், கம்போங் சாமாங் மற்றும் கம்போங் சுங்கை பெஞ்ஜூரிங் உள்ளிட்ட பல கிராமங்களும் வெள்ள்த்தால் பாதிக்கப்பட்டன.

சுங்கை பெஞ்ஜூரிங்கில் இருந்து வெள்ள நீர் சுமார் 11.30 மணியளவில் குறையத்தொடங்கியது . அதற்கு முன்னர் பெந்தோக் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here