கோவிட் பாய்ச்சல் 27 அடிகளா?

கோலாலம்பூர், ஏப்ரல் 5-

வீட்டில் தயாரிக்கப்பட்ட முகமூடிகள் அணிவதை அரசு தடுக்காது என்று சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், நெரிசலான பகுதிகளைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர். முதன்மைச் சுகாதாரச் சேவை ஊழியர்களும் சமூக இடைவெளியை இந்நேரத்தில் புறக்கணிக்கக்கூடாது என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மக்கள் நடமாட்டக்கட்டுப்பாடு கோவிட் -19 இன் பரவலைக் கட்டுப்படுத்த உதவுகிறது . அதோடு சந்தை, மருந்தகம், மருத்துவமனை அல்லது அலுவலகங்களுக்குச் செல்வது போன்றவற்றில் கூடுதலாகப் பாதுகாப்பைப் பின்பற்றவவும் அனுமதிக்கப்படுகிறார்கள்,
.
கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் மூலம் மற்றவர்களுக்கு இந் நோய்த்தொற்று பரவுகிறது என்ற ஆய்வுகள் தெளிவாகக் தெரிவிக்கிறது. பேசுதல், இருமல் அல்லது தும்மலின் மூலம், அருகில் உள்ளவர்களுக்கு விரைவாகத்தொற்றுகிறது.
சுமார் 27 அடி தூரம் வரை தும்மலின் பாதிப்பு இருக்குமென்றும் கூறப்படுகிறது.

தொற்றின் பரவலைக் குறைக்க ஆறு அடி (1.83 மீ) இடைவெளியைப் பராமரிப்பது முக்கியமானது என்றும் சி.டி.சி தெரிவித்துள்ளது.

முகமூடி பிரச்சினை தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தனது நிலைப்பாட்டை மதிப்பாய்வு செய்ததன் முடிவாக இந்த நடவடிக்கை அமைவதாக அவர் கூறினார்.