ஹஜ் யாத்திரை: 15 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் சவுதி அரேபியாவில் திரண்டுள்ளனர்

இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை கோவிட்-19 கட்டுப்பாடுகளின்றி முழு வீச்சில் மேற்கொள்ளப்படுகிறது.

15 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் சவுதி அரேபியா சென்றுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் மிகப் பெரிய சமய நிகழ்வாகக் கருதப்படும் ஹஜ் யாத்திரை நாளை (26 ஜுன்) அதிகாரபூர்வமாகத் தொடங்கவிருக்கிறது. அப்போது முஸ்லிம்கள் வெள்ளை மேலாடை அணிந்து புனித யாத்திரைக்கான முதல் சடங்கை மேற்கொள்வர்.

பெரிய பள்ளிவாசலின் மையப் பகுதியிலிருக்கும் புனிதக் கட்டடமான காபாவைச் சுற்றி வலம் வருவதும் அதில் ஒன்று.

ஆயிரக்கணக்கான சவுதி அரேபியக் குடியிருப்பாளர்களுடன் பல நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அன்பர்களும் அந்தச் சடங்கில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றச்செயல்களைத் தடுக்கவும் யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here