கோலாலம்பூர் :
சுத்திகரிக்கப்படாத நீர் உத்தரவாதத் திட்டத்தை அமல்படுத்துவதன் வழி சிலாங்கூர் மாநில அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் திட்டங்களை Air Selangor Sdh Bhd நிறுவனம் வரவேற்கிறது.
இத்திட்டத்தின் வழி மக்களுக்கு தூய்மையான குடிநீரை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்யும் ஒரு முன்னோக்கு சிந்தனை முயற்சி என்று Air Selangor தெரிவித்தது.

சுத்திகரிக்கப்படாத நீர் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பம்ப் நிலையங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கு சிலாங்கூர் மாநில மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையேற்றார்.
சிலாங்கூரில் மிக நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் சுத்திகரிக்கப்படாத நீர் மாசு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த பம்ப் நிலையங்களில் ஒப்படைப்பு திகழ்கிறது.
சுத்திகரிக்கபடாத நீர் மாசு பிரச்சினையால் 2020ஆம் ஆண்டிலிருந்து சிலாக்கூர் மாநிலம் சுத்திகரிக்கப்படாத நீர் மிகப் பெரிய அளவில் குடிநீர் விநியோகத் தடைகளை எதிர்நோக்கி இருந்தது.
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஒரு வியூகத் திட்டமாக உத்தரவாதத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் சுத்திகரிக்கப்படாத நீரில் மாசு பட்டாலும் தூய்மையான குடிநீர் விநியோகம் தடைப்படாது என்பது உறுதி செய்யப்படு கிறது.

சுங்கை சிலாங்கூரில் இருந்து பெறப்படும் சுத்திகரிப் படாத நீர் வளங்கள் தூய்மைக் கேடாக இருந்தாலும் குடிநீர் விநியோகம் தங்கு தடையின்றி இருப்பது உறுதி செய்யப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் HORAS 600, Kolam Hang Tuah மாற்றுத் திட்டத்தின் கீழ் சுத்திகரிக்கப்படாத நீரைப் பெறுவதற்கு வகை செய்கிறது. இங்கிருந்து ரந்தாவ் பாஞ்சாங் கில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அந்த சுத்தி கரிக்கப்படாத நீர் அனுப்பப் படும். இது தூய்மைக்கேடு நிறைந்த ஆற்று வளங்களைக் கடந்து செல்லும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் தெரிவித்தார்.
இது ஒரு நீண்ட காலத் தீர்வுக் கான திட்டம் என்றும் அவர் குறிப்பிட்டார். இது நம்முடைய நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயலாக்கங்களை தொடர்ந்து பாதுகாப்பதோடு சிலாங்கூரில் நம்பகத்தன்மை மிக்க குடிநீர் விநியோகம் உள்ளது என்று பொதுமக்களின் நம்பிக் கையை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசாங் கத்தின் இந்த பல கட்ட அணுகுமுறைக்கு ஆயர் சிலாங்கூர் தன்னுடைய முழு ஆதரவை வழங்கும் என்றும் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய பகுதிகளில் உள்ள 9.62 பயனீட்டாளர்களுக்கு தடை யில்லாத குடிநீரை வழங்கும் என்று ஆயர் சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி அடாம் சஃபியான் கஸாலி தெரிவித்தார்.
சுத்திகரிக்கப்படாத நீர் உத்தரவாத திட்டத்தின் கீழ் நீர் தூய்மைக்கேட்டால் சுத்தி கரிப்பு நிலையங்கள் மூடப் படுவது கிட்டத்தட்ட 95 விழுக்காடு தவிர்க்கப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.





















