கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. இந்நாட்டின் நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தங்கிப்படிக்கும் வகையில் மாணவர் விடுதியுள்ளது. இதில் பல மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளியில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 13 மாணவர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.























