ஜோகூர்:
ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்பாடுத்தும் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு RM500 மில்லியனை ஒதுக்குவதற்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வர் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த திட்டத்தில் பல மாடிகள் கொண்ட வாகன தரிப்பிடம் உட்பட பல புதிய உயரமான தொகுதிகள் கட்டப்பட்டுள்ளன என்றார்.

இந்த ஆண்டு தொடங்கும் கட்டுமான நடவடிக்கையில், பல மாடிகள் கொண்ட வாகன நிறுத்துமிடங்கள் விரைவில் கட்டப்படும் என்று அன்வர் கூறினார்.
“நிதி அமைச்சகத்துடன் கலந்துரையாடிய பிறகு, இந்த மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் வேண்டும் என்றவுடனேயே இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
HSAக்கு இன்று விஜயம் செய்த பின்னர் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

குறித்த விஜயத்தின்போது சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா, ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபீஸ் காசி, சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹமட் ரட்ஸி அபு ஹாசன் மற்றும் HSA இயக்குநர் டாக்டர் சல் அதான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மருத்துவமனை சுமார் 100 ஏக்கர் (40 ஹெக்டேர்) பரப்பளவைக் கொண்டுள்ளது, இங்கு கார் பார்க்கிங் கட்டுவதற்கும், மேலும் பல உயரமான வளாகங்களை உருவாக்குவதற்கும் இடம் போதுமானது, இந்த பரந்த அளவில் மருத்துவமனை சேவைகளைச் சமாளிக்கவும் நோயாளிகளின் நெரிசலைத் தீர்க்கவும் முடியும் என்று அன்வார் கூறினார்.










