தோல்வி வரிசையில் டிரம்புக்கு 11 ஆவது இடம்

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோற்றதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் ஆட்சியில் இருக்கும் அதிபர்களில் மீண்டும் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்களில் டிரம்ப் 11 ஆவது இடத்தில் இருக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் 273 இடங்களில் வெற்றி பெற்று ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கெனவே அதிபராக உள்ள டிரம்ப் 214 இடங்களை பெற்றார். இந்த தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ் துணை அதிபரானதை அடுத்து நாடே கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில் தேர்தல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி முதல் முறையாக அதிபர் தேர்தலில் மறுபடியும் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்களுள் ரிச்சர்ட் நிக்ஸன் ஆவார். இந்த சம்பவம் 1976 இல் நடைபெற்றது.

கடைசியாக 1992ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிபர் ஜார்ஜ் புஷ் ஆவார். அது போல் 1888-ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் குரோவர் க்ளீவ்லாந்து.

எனினும் அவர் 4 ஆண்டுகள் கழித்து அதிபர் பெஞ்சமின் ஹாரீஸ்சனை தோற்கடித்துவிட்டு மீண்டும் வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்தார். பெஞ்சமின் ஹாரீஸ்சன் மட்டுமே தொடர்ச்சியற்று இரு முறை அதிபராக இருந்த ஒரே நபர்.