போலி MITI கடிதங்களை பயன்படுத்தி 475 கிலோகிராம் கெத்தும் இலைகளை இடமாற்றிய இரு ஆடவர்கள் கைது

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19:

475 கிலோகிராம் எடையுள்ள கெத்தும் இலைகளை கொண்டுவரஅனைத்துலக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சின் (MITI) போலி கடிதத்துடன் மாநிலம் கடக்க முயற்சி செய்த இரு ஆடவர்களை நேற்று பேராக், தெலுக் இந்தானில் வைத்து போலீஸ் அதிகாரிகள் முறியடித்தனர்.

28,500 வெள்ளி மதிப்புள்ள கெத்தும் இலைகளை ஏற்றிச் சென்ற லாரியை கடல் போலீஸ் படை (PPM) அதிகாலை 1.45 மணிக்கு பத்து 5 , ஜாலான் தெலுக் இந்தான்-சபா பெர்னாமில் தடுத்து வைத்தது.

PPM நடப்பு கொமாண்டர் ஷோப்ரி சாதின் கூறுகையில், தங்கள் உளவுத்துறை ஒரு மாதமாக சேகரித்த தகவலின் அடிப்படையிலேயே 47 வயது மற்றும் 48 வயதுடைய இரு ஆடவரையும் கைது செய்தது.

95 பொட்டலங்களாக பொதி செய்யப்பட்ட கெத்தும் இலைகளை செபராங் பேராக்கில் இருந்து கிள்ளான் பள்ளத்தாக்கு வரை பயணம் செய்ததாக அவர் கூறினார்.

“அந்த லோரியினை பரிசோதனை செய்த போது 95 கருப்பு பிளாஸ்டிக் பொதிகளில் கொண்டு வரப்பட்ட 475 கிலோ கெத்தும் இலைகளைக் கண்டுபிடித்ததாக கூறினார்.

“கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி அதிக கேள்வி இருப்பதாகவும் MCO காலத்தில் இவ்வாறு செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பை அவர்கள் பயன்படுத்த விரும்புவதாகவும் தெரியவருகின்றது என்றும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஹிலீர் பேராக் மாவட்ட காவல் தலைமையகத்தின் (IPD) போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஷோப்ரி தெரிவித்தார்.

பயன்படுத்தப்பட்ட லோரிகள் உட்பட அனைத்து பொருட்களும் 60,000 வெள்ளி மதிப்புடையதாகும் என்றார்.

“மேலும் விஷம் சட்டம் 1952 இன் பிரிவு 30 (3) மற்றும் தொற்று நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துதல் (நோய்த்தொற்றின் உள்ளூர் பகுதிகளில் நடவடிக்கைகள்) ஒழுங்குமுறைகள் (எண் 3) 2020 ஆகியவற்றின் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here