வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி உதவ வேண்டும்

 – WHO  வேண்டுகோள்!

  • மேற்கத்திய நாடுகளில் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
  • வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை கொடுக்க முன்வரவேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் வேண்டுகோள்.

உலகம் முழுவதும் கடந்த ஒரு வருட காலத்துக்கும் மேலாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு எதிராக மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என தற்போது விழிப்புணர்வு அடைந்துள்ளனர்.

எனவே பல இடங்களில் தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

அப்பொழுது பேசிய அவர், ஆறு வாரங்களாக உலகளவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாகவும், கடந்த 4 வாரங்களாகச் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடும் பணிகளில் உலக நாடுகளிடையே ஏற்றத்தாழ்வு இருப்பதாகவும் மேற்கத்திய நாடுகளில் தான் அதிகம் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்க உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் மற்ற நாடுகளுக்கு அதிகளவில் தடுப்பூசிகளை வழங்க முன் வரவேண்டும் எனவும் உலகம் முழுவதும் பரவலாக தடுப்பூசி செலுத்தப்பட்டால் மட்டுமே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றை குறைக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.