கேஃப் காஃபி டே நிறுவனரும் எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகனுமான விஜி சித்தார்த்தா மாயமாகியுள்ளதால் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
காஃபி டே நிறுவனரும் கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் விஜி சித்தார்த்தா மாயமாகியுள்ளார். விஜி சித்தார்த்தை கடைசியாக நேத்ராவதி ஆற்றின் அருகே கண்டதாக சிலர் கூறியதால், ஆற்றில் தேடும் பணியில் தீவிரமாக போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மாயமான விஜி சித்தார்த்தாவை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விஜி சித்தார்த்தின் தொலைபேசியும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.
கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் மற்றும் பிஎல் சங்கர் ஆகியோர், பெங்களூருவில் உள்ள எஸ்.எம். கிருஷ்ணாவின் இல்லத்திற்கு சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.