நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி டிங்ம்பர் 11ஆம் தேதிவரை பிலிப்பைன்ஸ் மணிலாவில் 22ஆவது சீ விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது.
2017இல் மலேசியாவில் 21ஆவது சீ போட்டி நடந்தது. போட்டியை ஏற்று நடத்திய மலேசியா 145 தங்கத்தை வென்றது. இதில் ஓட்டப்பந்தயத்தில் 8 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் கிடைத்தது.
இம்முறை பிலிப்பைன்ஸ் சீ போட்டிக்கு மலேசியா மிகப்பெரிய குழுவை அனுப்பி வைக்க திட்டமிட்டிருப்பதாக மலேசிய அணித் தலைவர் டத்தோ மெகாட் ஸூல்கர்யணன் தெரிவித்தார்.
2007இல் நடந்த கோராட் சீ போட்டியில் மலேசியா 820 விளையாட்டாளர்களை அனுப்பி வைத்தது. இதில் 68 தங்கம், 52 வெள்ளி, 96 வெண்கலத்தை மலேசியா வென்று 2ஆவது இடத்தைப் பிடித்தது.
போட்டியை ஏற்று நடத்திய தாய்லாந்து 183 தங்கத்தை வென்று ங்ாதனை படைத்தது. இம்முறை சீ போட்டியை ஏற்று நடத்தும் பிலிப்பைன்ஸ் கூடுதல் தங்கத்திற்கு இலக்கு வைத்திருக்கிறது.
பிலிப்பைன்ஸ் சீ போட்டியில் கூடுதல் தங்கத்தை வெல்லும் இலக்கில் மலேசியா மிகப்பெரிய குழுவை அனுப்பி வைக்கும் என்று டத்தோ மெகாட் ஸூல்கர்ணயன் தெரிவித்தார்.
இதனிடையே, கோலாலம்பூர் சீ போட்டியைக் காட்டிலும் மணிலா சீ போட்டியில் மலேசிய ஓட்டப்பந்தய விளையாட்டாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு கூடுதல் பதக்கங்களை வெல்வார்கள் என்று மலேசிய ஓட்டப்பந்தயச் ங்ங்கத் தலைவர் டத்தோ எஸ்.எம். முத்து தெரிவித்தார்.
அடுத்த மாதம் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை புக்கிட் ஜாலில் அரங்கில் மலேசிய பொது ஓட்டப்பந்தயப் போட்டி நடைபெறுகிறது. இதில் தேர்வு நேரத்தை முறியடிக்கும் வீரர்களும் வீராங்கனைகளும் சீ போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அவர் ங்ோன்னார்.