மனித உறுப்புகள் விற்பனை; சட்டவிரோத செயல் முறியடிப்பு

அரிசோனா:

விஞ்ஞான ஆராய்ச்சிக்காக மனித உடல் பாகங்களைக் கொண்டு அதிர்ச்சியூட்டும் கண்டிப்பிடிப்புக்களை உருவாக்கி வந்த ஒரு அறிவியல் கூடத்தில்  மனித உடல்கள் மற்றும் உறுப்புகளால் நிரப்பப்பட்ட வாளிகள், பிறப்பு உறுப்புகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

அரிசோனாவில் உள்ள உயிரியல் வள மையத்தில் (பி.ஆர்.சி) நடத்தப்பட்ட சோதனையில்  சம்பந்தப்பட்ட இந்த அறிவியல் கூடம்  கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டவிரோதக்  கடத்தல் மற்றும் மனித கைகால்கள் விற்பனைச் செய்து வந்த குற்றத்திற்காக மூடப்பட்டது என தெரிய வந்தது.

விஞ்ஞான நோக்கங்களுக்காகத் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் உடல் உறுப்புகளை  அறிவியல் மையத்திற்கு தானம் செய்த 33 பிரதிவாதிகளால் இந்த பயங்கரமான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்கப்பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அந்த அறிவியல் மையம் லாபம் சாம்பாதிக்கும் நோக்கத்தில் மூற்றாம் தரப்பிடம் மனித உடல் உறுப்புகளை விற்று வந்தது.  முன்னாள் எஃப்.பி.ஐ (ஊஆஐ) முகவர் மார்க் குவினார், மனித தலைகள், கைகள் மற்றும் கால்கள் நிறைந்த ஒரு வாளியையும் அங்குள்ள குளிர்சாதன பெட்டியினுள்  வைக்கப்பட்டிருந்த ஆண் உறுப்புகளைக் கண்டபோது அந்த மையத்தின் காட்சி திகிலூட்டுவதாக விவரித்தார்.

இதனையடுத்து, ஃபிராங்கண்ஸ்டைன் போன்று சுவரில் தொங்கியிருந்த  ஆணின்  வயிற்றுப் பகுதியில் ஒரு பெண்ணின் தலையை வைத்துத் தைத்திருப்பதையும் கண்டதாக அவர் கூறினார். அங்கு வைக்கப்பட்டிருந்த உடல் உறுப்புகள் யாருடையது என்பது குறிப்பிடப்படவில்லை.

தோள்பட்டை அல்லது தலை இல்லாத சிறுவனின் உடல் 2,900 அமெரிக்க டாலருக்கு (கீ–11,947) விற்கப்பட்டதாகவும், முழு முதுகெலும்பின் விலை 950 அமெரிக்க டாலர் (கீ–3,913) என்றும் 2013 ஆம் ஆண்டில் ஒரு விலை பட்டியல் காட்டியதாக நியூஸ்.காம் தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டில், பி.ஆர்.சி (ஆகீஇ) உரிமையாளர் ஸ்டீபன் கோர், உடலை தானம் செய்தவர்களின் அனுமதியின்றி, அங்கீகரிக்கப்படாத கால்களைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சட்டவிரோத வியாபாரம் செய்ததாக க் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.கோருக்கு ஒரு வருட சிறைத்தண்டனையைச் சேர்த்து  நான்கு ஆண்டுகள் கண்காணிப்பும் 121,000 அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here