2-ம் கட்டமாக 5,595 எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு ஒப்புதல்: 1.2 பில்லியன் லிட்டர் எரிபொருள் மிச்சம்

டெல்லி: நகரப் போக்குவரத்து வசதிக்காக இரண்டாம் கட்டமாக 64 நகரங்களுக்காக 5,595 எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க காற்று மாசுபாடைக் குறைக்கும் வகையில் எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகம் செய்ய மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த வகையில் இரண்டாம் கட்டமாக 64 நகரங்களுக்கான எலெக்ட்ரிக் பொதுப் பேருந்துகள் உபயோகத்துக்குத் தயாராகி உள்ளன.

அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நகரங்கள், ஸ்மார்ட் நகரங்கள், யூனியன் பிரதேச தலைநகரங்கள், சிறப்பு அந்தஸ்து நகரங்கள் ஆகிய நகரங்களின் நிர்வாகங்கள் எலெக்ட்ரிக் பேருந்துகளுக்கான தேவையை மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் பொது நிறுவனங்கள் துறைக்கு விண்ணப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் பேருந்துகள் பொதுப் பயன்பாட்டுக்கு வந்தால் ஒப்பந்த காலத்தில் 4 பில்லியன் கிலோமீட்டர் பயணிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இதன் மூலம் 1.2 பில்லியன் லிட்டர் எரிபொருள் மிச்சமாகும் என்றும் கார்பன் வெளியேற்றம் 2.6 மில்லியன் டன் வரையில் குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here