நிஸான் லீப் எலக்ட்ரிக் கார் விரைவில் அறிமுகம்

உலக அளவில் அதிகம் விற்பனையாகும் மின்சார கார் மாடல்களில் ஒன்றாக நிஸான் லீப் விளங்குகிறது. பல்வேறு நாடுகளில் சிறப்பான விற்பனையை பதிவுசெய்து வருகிறது. இந்நிலையில், இந்த மின்சார கார், இந்தியாவிலும் அறிமுகம்  செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது. இந்த ஆண்டுக்குள் நிஸான் லீப் மின்சார கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இரண்டாம் தலைமுறை மாடலாக வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் லீப் கார்தான், இந்தியாவிலும்  வர இருக்கிறது. இந்த கார், இறக்குமதி செய்யப்பட்டு, இந்திய விதிகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்படுகிறது. இதற்கான, ஆரம்பக்கட்ட பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. மேலும், சென்னையில் 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நிஸான்-  ரெனோ கூட்டணியின் கார் தொழிற்சாலையில் இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பு தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.

வாடிக்கையாளர்களின் கருத்து அடிப்படையில் இந்த காரை அறிமுகம் செய்யும் திட்டத்தை நிஸான் இறுதிசெய்ய உள்ளது. இது, பிரிமியம் ரக ஹேட்ச்பேக் கார் மாடலாக வர இருக்கிறது. இந்த கார், ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையிலான  எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிஸான் லீப் கார் தவிர்த்து, புதிய எஸ்யூவி ரக கார் மாடலையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர நிஸான் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒரு புதிய கார் என்ற ரீதியில் தனது வர்த்தகத்தை வலுவாக்கிக்கொள்ள  நிஸான் முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here