ஊழியர்களின் பிடிபிஎன் கடன் – செலுத்த உதவும் முதலாளிகளுக்கு வரிச் சலுகை

கோலாலம்பூர்

தங்களது ஊழியர்களின் உயர்கல்விக் கடக்ச் செலுத்தும் முதலாளிகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும்.

இதனை பிடிபிஎன் மூத்த தலைமை மேலாளர் அப்துல் காபார் யூசோப் தெரிவித்தார்.

இந்த வரிச் சலுகை இவ்வாண்டு டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும். நிறுவனங்கள் ஊழியர்களின் கடனை மொத்தமாகவோ அல்லது மாதத் தவணையாகவோ செலுத்தலாம்.

கடனுக்ககான தொகை முதலாளிகளைப் பொறுத்ததாகவும். எனினும், அந்தத் தொகையை ஊழியர்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது. ஊழியர்களின் போனஸ் மற்றும் இதர வருமானத்திலிருந்து பிடித்தம் செய்யக்கூடாது.

இந்தச் சலுகையானது சுய தொழில் செய்வோருக்குப் பொருந்தாது. இந்த விதிமுறையில் ஊழியர் ஒரு பதிவு பெற்ற முதலாளியிடம் வேலை செய்ய வேண்டும்.

கடன் தொகையை ஆன்லைன் மூலமாகச் செலுத்தலாம். இதன் விவரங்கள் தெரிய www.pitptn.gov.my எனும் அகப்பக்கத்தை நாடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here