ஜோகூர் உட்பட நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் சனிக்கிழமை வரை தொடர் மழைக்கு வாய்ப்பு – மலேசிய வானிலை ஆய்வு மையம்

கோலாலம்பூர், பிப்ரவரி 24 :

ஜோகூர் மற்றும் தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் இந்த சனிக்கிழமை வரை தொடர்ந்து கடும் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MET Malaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் முஹமட் ஹெல்மி அப்துல்லா இதுபற்றிக் கூறுகையில், இது தென்சீனக் கடலில் பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்தத் தட்பவெப்ப நிலை ஆகியவற்றின் தொடர்ச்சியாகும், இதனால் மலேசிய தீபகற்பத்தின் கிழக்குக் கடலோரக் கடற்பகுதியில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நீண்ட காலமாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

அதுமட்டுமின்றி, தீபகற்பத்தின் கிழக்குக் கரையோரப் பகுதியில் கிளந்தான், திரெங்கானு, பகாங் மற்றும் கிழக்கு ஜோகூர் மற்றும் சரவாக், சபா மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பலத்த காற்றும், கொந்தளிப்பான கடல் அலைகளும் அடுத்த திங்கட்கிழமை வரை தொடரும் என்றும் அவர் கூறினார்.

மேலும் “உலு திரெங்கானு, டுங்கூன் மற்றும் கெமாமன், திரெங்கானு; ஜெராண்ட், குவாந்தான், பெக்கான் மற்றும் ரோம்பின், பகாங் மற்றும் மெர்சிங், ஜோகூர் ஆகிய இடங்களில் தொடர்ச்சியான கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது என்றார்.

“அதுமட்டுமின்றி, இந்த சனிக்கிழமை வரை தொடர் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஏனைய பகுதிகளான கிளாந்தான்; உலு திரெங்கானு, டுங்கூன், கெமாமன், பெசூட், செத்தியூ, கோலா நெராஸ், கோலத் திரெங்கானு மற்றும் மாராங், திரெங்கானு; கேமாரூன் ஹைலேண்ட்ஸ், லிப்பீஸ், ரவூப், பெந்தாங், தெமெர்லோ, மாரான் மற்றும் பேரா, பகாங் என்பனவும் அடங்கும்.

“இதில் சிலாங்கூர்; கோலாலம்பூர்; புத்ராஜெயா; நெகிரி செம்பிலான்; மலாக்கா மற்றும் தங்காக், சிகாமாட், மூவார், பத்து பஹாட், குளுவாங், போந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு, ஆகியவையும் அடங்கும்” என்று இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here