நோராவின் உடலுடன் உறவினர்கள் தாயகம் திரும்புகின்றனர்

சிரம்பான்

நோரா ஹனின் உடலை இறுதிச் சடங்கிற்காக அவரின் உடலை அயர்லாந்துக்குக்  கொண்டுச் செல்ல அவரின் பெற்றோர் முடிவெடுத்துள்ளனர்.

தனது மகளின்  உடலை அமெரிக்காவிற்கு கொண்டுச் செல்ல இருப்பதாக நோராவின் தாயார் மீப், டத்தின்ஶ்ரீ வான் அஸிஸாவிடம் கூறியதாக மாநில மகளிர், குடும்ப விவகாரங்கள் மற்றும் நலக்குழு குழுத் தலைவர் நிக்கோல் டான் லீ கூன் கூறினார்.

இதற்கிடையில், வான் அஸிஸா   நோராவின் குடும்பத்தை நேரில்  சந்தித்து அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 4 தேதி முதல் காணாமல் போன் நோரா ஹன்னை தேடும் வேட்டையில் 10ஆவது நாளில் அவரின் உடல் அவர் தங்கியிருந்த தங்கும் விடுதியிலிருந்து 2.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் கண்டு பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here