பராமரிப்பாளரின் இல்லத்தில் தீ – 5 குழந்தைகள் மரணம்

வாஷிங்டன், பராமரிப்பு இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குழந்தைகள் மரணமடைந்தன.

இந்த அசம்பாவிதம் அமெரிக்கா, பென்னிசெல்வேனியாவின் ஈரி எனும் இடத்தில் நடந்துள்ளது.

வீட்டில் தீ மூண்ட போது, பிள்ளைகள அனைவரும் மேல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் அவர்கள் 8 மாதத்திலிருந்து 7 வயது வரைக்குமான பிள்ளைகள் என தெரிகிறது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் வீட்டில் தீ கொளுந்து விட்டு எரிந்ததைக் கண்டனர்.

5 குழந்தைகளின் சடலங்கள் கீழே கொண்டுவரபட்டன. ஆனால், அவை இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதில் கொல்லப்பட்ட பிள்ளைகளில் ஒருவர் அதன் உரிமையாளரான இலைன் ஹாரிசின் குழந்தையாகும். நால்வர் சகோதரர்களின் பிள்ளைகள் என்றும் சொல்லப்படுகிறது.

ஹாரிசின் மேலும் இரண்டு பிள்ளைகள் காயமடைந்ததாகவும் அவர்கள் மேல் மாடியிலிருந்து குதித்தபோது அந்தக் காயம் ஏற்பட்டுள்ளது. மின் கசிவினால் அந்தத் தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. எனினும், அதன் காரணம் இன்னும் ஆராயப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here