கர்நாடகாவில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு: 15 பேர் காணவில்லை என தகவல்

பெங்களூர்

கர்நாடகா மாநிலத்தில் பெலகாவி, பிஜாப்பூர், ரெய்ச்சூர், குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

கர்நாடகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து குடகு, கோலார், சிக்மகளூர், தும்கூர், மாண்டியா, மைசூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவால் சாலைகள் சேதம் அடைந்துள்ளதால் குடகு மலை பிரதேசத்தில் போக்குவரத்து முடங்கியுள்ளது. மாநிலத்தின் அணைகள், நீர் தேக்கங்கள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. தொடர் மழையால் 21 மாவட்டங்களில் ஏரி, குளங்கள் நிரம்பி, மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் கர்நாடக பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முடிக்கிவிடப்பட்டு இயல்பு நிலை திரும்புகிறது.

இந்நிலையில் கர்நாடக அரசு அறிவித்துள்ள அறிக்கையில் மழை வெள்ளத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கர்நாடக முழுவதும் 15 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணியில் தேசிய மீட்புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை 7 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 51 ஆயிரம் கால்நடைகளும் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here