போலீஸ்காரர்போல் ஆள்மாறாட்டம் செய்து கொள்ளையடித்த வெளிநாட்டு வாலிபர் கைது

பயான் லெப்பாஸ்:

காவல்துறையைப் போல் ஆள்மாறாட்டம், கொள்ளையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு வாலிபர் ஒருவன் கைது செய்யப்பட்டார்.

குறித்த 16 வயது இளைஞர், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் (UNHCR) அட்டை வைத்திருக்கிறார் என்றும், நள்ளிரவு 12.25 மணியளவில் கெலுகோரின் டேசா பெர்மாய், லோரோங் சுங்கை துவா கார் கழுவும் இடத்திற்கு முன்னால் கைது செய்யப்பட்டதாக தென்மேற்கு மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் ஜாஃப்ரி எம்.டி ஜைன் தெரிவித்தார்.

அண்மையில் பயான் பாருவில் பாதிக்கப்பட்ட 28 வயதுடைய வெளிநாட்டு இளைஞன் அளித்த புகாரின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

“அறிக்கையின்படி, சந்தேக நபர் போலீஸ் அதிகாரி போல் மாறுவேடமிட்டு, பாதிக்கப்பட்டவரிடமிருந்து கடப்பிதழை கேட்டுள்ளார், மேலும் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் முகத்தில் குத்தியுள்ளார்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் 394 மற்றும் குற்றவியல் சட்டத்தின் 170 இன் படி வழக்கு விசாரிக்கப்படுவதாகவும், கார் கழுவும் தொழிலாளியாக பணிபுரிந்த சந்தேக நபர் இன்று முதல் எதிர்வரும் மே 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here