ஃபெட் கூட்டத்திற்கு முன்னதாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட் மதிப்பு சற்று குறைந்துள்ளது

கோலாலம்பூர்:

ன்றும் நாளையும் நடைபெறும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் (FED) கூட்டத்திற்கு முன்னதாக, கிரீன்பேக் உறுதியாக இருந்ததால், இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு சற்று குறைந்துள்ளது.

மாலை 6 மணி நிலவரப்படி, நேற்று திங்கட்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.7650/7700 என்ற நிலையிலிருந்து, இன்று சற்று குறைந்து 4.7700/7750 ஆக பதிவாகியது என்று, பேங்க் முகமலாட்டின் தலைமைப் பொருளாதார நிபுணர், முகமட் அஃப்ஸானிசம் அப்துல் ரஷித் கூறினார்.

இந்நிலையில் இன்று இரவும் நாளையும் நடைபெறும் மத்திய வங்கியின் பெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி (FOMC) கூட்டத்திற்காக சந்தைகள் காத்திருப்பதால், அமெரிக்க டாலர் குறியீடு (DXY) இன்று ஓரளவு முன்னேறி 105.896 புள்ளிகளாக உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here