கார் பட்டறையில் தீ இரண்டு வாகனங்கள் முற்றாக அழிந்தன

கோலாலம்பூர்

பெட்டாலிங் ஜெயா, கோத்தா டமான்சாராவில் நிகழ்ந்த தீ விபத்தில் பட்டறையில் இருந்த இரு கார்கள் முற்றாக அழிந்தன.

இந்தச் சம்பவம் 18ஆம் தேதி, சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு ஜாலான் டெக்னோலோஜியில் உள்ள கார் பட்டறையில் நடந்ததாகவும் அதில் இன்னொரு கார் முன்பகுதியில் 5 விழுக்காடு சேதம் அடைந்ததாகத் தீயணைப்பு, மீட்புப் படைத் தலைவர் தெரிவித்தார்.

அந்த தீ விபத்தில் 20க்கு 20 அடி எனும் பரப்பளவில் இருக்கும் அந்தப் பட்டறையின் சுவர் சேதமடைந்தது.

தீக்கான காரணமும் சேதத்தின் இழப்பும் ஆராயப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here