புக்கிட் பிந்தாங்கில் பெல்லி நடனம் ; மன்னிப்புகோரியது ஏற்பாட்டு நிறுவனம்

கோலாலம்பூர்:

சர்ச்சைக்குரிய பெல்லி நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக Buy & Save store நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு முழுப்பொறுப்பேற்பதாகவும், அதிகாரிகளின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், இங்குள்ள புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஒரு கடைக்கு வெளியே பெண்கள் குழு ஒன்று அரைகுறை ஆடையுடன் பெல்லி டான்ஸ் ஆடிய வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி பொதுமக்களின் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.

ஆகஸ்ட் 5 அன்று கடையின் வணிக ஆண்டு விழா கொண்டாட்டங்களுக்காக ஒரு நிகழ்வு நிறுவனத்தில் ஈடுபட அதன் சந்தைப்படுத்தல் மேலாளர் பணிக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

“நிகழ்ச்சியின் போது, நடனக் கலைஞர்கள் எந்த ஆடை அணிவார்கள்” என்று தெரியவில்லை.

“நிகழ்ச்சி தொடங்கிய ஐந்து நிமிடங்களில், மலேசியாவின் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப நிகழ்ச்சி இல்லை என்று நிர்வாகம் கண்டறிந்ததும், நிகழ்வு உடனடியாக நிறுத்தப்பட்டது” என்று அந்த நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உடனடி நடவடிக்கையாக, உள்ளக விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும், மேலாளரை இடைநீக்கம் செய்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாம் மலேசிய கலாச்சாரத்தை எப்போதும் மதிப்பதாகவும், சமூக ஊடகங்களில் சிலர் பொய்யாகக் கூறுவது போல் தாம் வெளிநாட்டு செல்வாக்கு உள்ள நிறுவனம் அல்ல என்றும், தாம் முழுக்க முழுக்க மலேசியாவுக்குச் சொந்தமான நிறுவனம் என்றும் நிறுவனம் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here