மதங்களை உடைத் தெறிந்த மனித நேயம்!! : மத பேதமின்றி வெள்ள நீர் புகுந்த கோயில், மசூதியை சுத்தம் செய்த இந்து – முஸ்லீம் இளைஞர்கள்

பெங்களூரு

கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோவில்கள் மற்றும் மசூதிகளை இந்து முஸ்லீம் இளைஞர்கள் ஒன்றாக கைக் கோர்த்து சுத்தம் செய்து வருவது நெகிழ்சியை ஏற்படுத்தி வருகிறது.கடும் மழை, நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவை சேர்ந்து கர்நாடக மாநிலத்தை புரட்டிப் போட்டிருக்கிறது. விடாது கொட்டிய பெருமழையின் பாதிப்பிலிருந்து மீள போராடுகின்றனர் கர்நாடக மக்கள். பல இடங்களில் வீடுகளில் சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியாத நிலையில், 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களிலேயே தங்கியுள்ளனர். இளைஞர்கள், பொதுமக்கள், ராணுவம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பலரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இப்போது வரை ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் குடகு மாவட்டத்தில் தலைநகரமான மடிகேரியில் இருந்து 18கிமீ தொலைவில் உள்ளது Hoddur என்ற கிராமம். இடைவிடாது பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்த கிராமம் சின்னாபின்னமாகியுள்ளது. மேலும் இந்த கிராமத்தில் அமைந்துள்ள கன்வா முனிஸ்வரர் கோயில்,காவிரி கரையில் உள்ள மாரியம்மன் கோயில், பாலமுரி மசூதி ஆகிய வழிபாட்டு ஸ்தலங்கள் வெள்ளம், சேர் சகதியினால் கடுமையாக அசுத்தமாகி இருந்தது. இந்த நிலையில் மழை சற்று ஓய்ந்தவுடன் அந்த கிராமத்தில் வசித்து வரும் சுமார் 50 இளைஞர்கள் மத பேதமின்றி ஒன்றாக கைக் கோர்த்து மசூதி மற்றும் கோயில்க்ளை சுத்தம் செய்தனர்.

இந்துக்கள் கோயிலுக்குள் நுழைந்து சுத்தப்படுத்தி தரும் அளவுக்கு இஸ்லாமிய இளைஞர்களின் சகிப்புத்தன்மை பாராட்டுக்குரியது. அதேபோல வேற்று மதம் என்று பாராமல், மனமுவந்து உதவி செய்ய வந்தவர்களுக்கு கோயில் நிர்வாகம் அனுமதி அளித்ததும் மகிழ்ச்சிக்குரியது. ஆபத்து என்று வந்துவிட்டால், இனம் என்ன, மதம் என்ன? இடம் என்ன? பொருள் என்ன? வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு இந்தியா’ என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்? எங்கு, எப்படி பிறந்து வளர்ந்திருந்தாலும் கடைசியில் தழைத்து நிற்பது என்னவோ ‘மனிதம்’தானே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here