பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது

ஆன்டிகுவா

இந்தியா லெவன் – வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகள் மோதிய 3 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.

கூலிட்ஜ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 297 ரன் என்ற முதல் நாள் ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. புஜாரா 100*, ரோகித் 68 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய  வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னுக்கு சுருண்டது.

116 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய லெவன் அணி 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. விஹாரி 64, கேப்டன் ரகானே 54 ரன்எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 305 ரன் எடுத்தால்  வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 21 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 47 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் டிராவில் முடிந்தது.இந்தியா லெவன் பந்துவீச்சில் பூம்ரா, அஷ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டெஸ்ட் ஆன்டிகுவா, நார்த் சவுண்டு மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here