பணத்திற்காக பெற்ற மகளையே கொன்ற பெண்ணின் வாக்கு மூலத்தை வைத்து மூத்த தலைவரை எப்படி கைது செய்தீர்கள்?

டெல்லி 

டெல்லி: டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் உள்ளனர். ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ப. சிதம்பரம் நேற்று அதிரடியாக கைது

பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாயமான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ நேற்றிரவு அதிரடியாக கைது செய்தது. 27 மணி நேர தலைமறைவுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்து விட்டு வீடு திரும்பியதும், சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து அவரை சுற்றிவளைத்து காரில் ஏற்றிச் சென்றனர். அவரிடம். சிபிஐ தலைமை அலுவலகத்தில் விடிய விடிய தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

ப. சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முடித்த பின்பு, அபிஷேக் மனு சிங்வி வாதங்களை தொடங்கினார்.

அபிஷேக் மனு சிங்வி : கைது செய்வது என்பது கட்டாயமல்ல, மொத்த வழக்கே இந்திராணி முகர்ஜி சொன்னதன் அடிப்படையில் தொடரப்பட்டதுதான்.

அபிஷேக் மனு சிங்வி : இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் கொடுத்து நான்கு மாதம் கழித்தே சிதம்பரம் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

அபிஷேக் மனு சிங்வி : இந்திராணி அப்ரூவரவாக மாறியதால் இந்த கைது நடவடிக்கை, ஆனால் அப்ரூவராக மாறி தற்போது அவர் சொன்னதை, 2018லேயே சொல்லி உள்ளார்.

அபிஷேக் மனு சிங்வி : கேள்விகளுக்கு பதில் தராமல் தப்பிக்கிறார் என்ற காரணத்துக்காக மட்டுமே சிதம்பரத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அபிஷேக் மனு சிங்வி : ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்ள வைப்பதற்கான கருவியல்ல காவலில் எடுத்து விசாரிக்கும் முறை.

அபிஷேக் மனு சிங்வி : கேள்விகளுக்கு பதில் தர மறுக்கிறார் என்பதற்கெல்லாம் காவலில் எடுத்து விசாரிக்க கோரலாமா ?

அபிஷேக் மனு சிங்வி : வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் தான் கைது நடவடிக்கை வேண்டும்.இஷ்டம் போல் கைது செய்வது ஒருபோதும் கூடாது .

அபிஷேக் மனு சிங்வி : விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் தான் ஒத்துழைப்பு தரவில்லை என அர்த்தம் ; விசாரணைக்கு ஆஜராகி கேள்விகளுக்கு பதில் தரவில்லை என்பது ஒத்துழைப்பு தரவில்லை என்று அர்த்தமல்ல

அபிஷேக் மனு சிங்வி : அந்நிய முதலீட்டு மேம்பாட்டு ஆணைய ஒப்புதல் 6 செயலாளர்களால் வழங்கப்பட்டது. அவர்களில் ஒருவர் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆனார். நடந்தவற்றை அவர் ஒப்புக் கொண்டும் உள்ளார்.

அபிஷேக் மனு சிங்வி : சாட்சியங்களை அழிக்க முயன்றார் என்ற குற்றச் சாட்டை சி.பி.ஐ வைக்கவில்லை, அப்படிப்பட்ட நிலையில் காவலில் எடுத்து விசாரிப்பது தேவையற்றது.

அபிஷேக் மனு சிங்வி :1. ஒத்துழைப்பு தராமை
2. சாட்சியங்களை அழிக்க முயல்தல்
3. தப்பிச் செல்லுதல்

அபிஷேக் மனு சிங்வி :இந்த மூன்று விஷயங்களுமே சிதம்பரத்தின் வழக்கில் இல்லை எனும் போது கைது நடவடிக்கை அவசியமற்றது.

அபிஷேக் மனு சிங்வி :ஜுன் 2018-க்குப் பின் சிதம்பரத்தை விசாரணைக்கு அழைக்காத சிபிஐ, தற்போது கைது செய்ய முனைப்பு காட்டுவது ஏன்?

அபிஷேக் மனு சிங்வி :பணத்திற்காக பெற்ற மகளையே கொன்ற பெண்ணின் வாக்கு மூலத்தை வைத்து நாட்டின் மூத்த தலைவரை எப்படி கைது செய்தீர்கள்?

அபிஷேக் மனு சிங்வி :இந்த வழக்கில் புதிதாக ஏதும் நடைபெற்று விடவில்லை ; காவலில் எடுத்து விசாரிக்க முயல்வதற்கான முகாந்திரம் என்ன ?

அபிஷேக் மனு சிங்வி :தேவையான கேள்விகளை சிதம்பரத்திடம் நீதிபதியே நேரடியாக கேட்கலாம் – அபிஷேக் சிங்வி

அபிஷேக் மனு சிங்வி :சி.பி.ஐ.க்கு தேவை சிதம்பரத்தின் பதிலா ? அல்லது அவர்கள் விரும்பும் பதிலா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here