சியோல், தென் கொரியாவில் அதிகரித்து வரும் துாக்கமின்மையை போக்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அந்நாட்டில் துாக்கப் போட்டி நடத்தப்பட்டது. தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள ஹான் நதிக்கரையில் உள்ள யோயுடோ ஹாங்கங் பூங்காவில் துாங்குவதற்கான போட்டி மே 2 ல் நடந்தது.
இதன்படி, நன்றாக ஆழ்ந்து குட்டித் தூக்கம் போடும் நபர்களுக்கென போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு சார்பில் பரிசு வழங்கப்படுகின்றது. இந்நிகழ்வு 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. சியோல் மாநகராட்சியால் ஆண்டுதோறும் நடத்தப்படும், ‘பவர் நேப்’ என்ற இந்த போட்டியில் 170 பேர் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் கலந்துகொள்ள குறிப்பிடத்தக்க விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றது.









