ஐதராபாத்
தெலுங்கு திரை உலகின் இளம் நாயகன்.ராஜ் தருண். பலவேறு குறும்படங்களில் நடித்துள்ள இவர், உய்யாலா ஜம்பாலா, மஞ்சு பலூன் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் நாயகனாக நடித்துள்ளார்.
மேலும் சில படங்களில் நடித்துவரும் இவர், நேற்று அதிகாலை சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான வால்வோ காரை ஓட்டி சென்றுள்ளார். ஐதராபாத்தில் உள்ள அவுட்டர் ரிங் ரோடில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென்று சாலை தடுப்பில் மோதி கார் பள்ளத்தில் இறங்கியது. உடனடியாக காரில் இருந்து இறங்கிய ராஜ் தருண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
விபத்து பற்றிய தகவல் அறிந்த ஐதராபாத் போக்குவரத்து போலீசார் காரை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்த போது, விபத்திற்கு பின் காரில் இருந்து இறங்கிய ராஜ்தருண் கும்மிருட்டில் பரபரப்புடன் தப்பி ஓடிய காட்சிகள் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து நடிகர் ராஜ் தருணை அழைத்து விசாரணை நடத்த ஐதராபாத் போலீசார் முடிவு செய்துள்ளனர்.