மோட்டார் சைக்கிள் – வான் மோதல் : 7 வயது சிறுமி உயிரிழப்பு

தானா மேரா:

தானா மேரா – பாசிர் மாஸ் சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து மாலை 6.30 மணியளவில் கம்போங் புக்கிட் மேரா அருகே நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னிருக்கையில் இருந்த நூர் இர்தினா ஒளியா ஸைனுடின் (வயது 7) என்பவர், தானா மேரா மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுக்கொண்டிருந்தபோது இரவு 8.30 மணியளவில் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று, தானா மேரா மாவட்ட காவல் தலைவர் முஹமட் ஹாக்கி ஹஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிள் சாலை சந்திப்பில் இருந்து வெளியேறும் போது, தானா மேராவிலிருந்து பாசிர் மாஸ் நோக்கிச் சென்ற வானுடன் மோதி விபத்து ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த சம்பவத்தில், கடுமையான காயங்களுக்கு உள்ளாகிய சிறுமி, உடனடியாக தானா மேரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், இருப்பினும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.

“உயிரிழப்பின் நேர்ந்த காரணத்தை உறுதிப்படுத்த பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும்,” என்றும், இந்த வழக்கு மோட்டார் போக்குவரத்து சட்டம் 1987-ன் பிரிவு 41(1)ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here