கேஎல்ஐஏ பணிகள் சீரடைகிறது – நெரிசல் குறைகிறது

சிப்பாங்

சனிக்கிழமையிலிருந்து மின்னியல் கோளாறினால் கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட பயணிகள் சேவை படிபடியாகச் சீரடைந்து, பயணிகளின் நெரிசல் குறைந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

மின் இணைப்புப் பாகங்களை நிர்வாகம் மாற்றிய பின்னர், நிலைமை சீரடைந்து வருவதாகத் தெரிவிக்கபட்டது.

புதன்கிழமையிலிருந்து மின்னியல் சாதனங்கள் பழுதடைந்ததால், வைஃபை, பயண தகவல் அறிவிப்புப் பலகை, பயணப் பதிவு, துணிப்பைகளிண் விநியோகச் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இன்று காலை 9.30 மணியளவில் விமான நிலைய சேவைகள் சீரடைந்து வழக்க நிலைக்குத் திரும்பி வருவதாகவும் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here