தாய்லாந்திற்கு கடத்தப்படவிருந்த 70 கிலோகிராம் கெத்தும் இலைகள் பறிமுதல்

கங்கார், மே 9:

நேற்று, மலேசிய கடல்சார் அமலாக்க முகமைத்துவத்தின் (Maritim) கோலாப் பெர்லிஸ் கடல்சார் மண்டலப் போலீசாரால், சுங்கை பாருவின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து 3.1 கடல் மைல் தொலைவில் RM12,600 மதிப்புள்ள 70 கிலோகிராம் கெத்தும் இலைகளைக் கைப்பற்றப்பட்டது.

கோலாப் பெர்லிஸ் கடல்சார் மண்டல இயக்குநர், கடல்சார் கமாண்டர் முகமட் ஹாஷிம் மாட் ஜெய்ன் கூறுகையில், அண்டை நாடுகளுக்கு கெத்தும் இலைகளை கடத்திய உள்ளூர் கும்பல் தொடர்பாக, பொதுமக்கள் புகார் அளித்ததன் விளைவாக இந்த பறிமுதல்கள் செய்யப்பட்டது.

அந்த இடத்தில், ரோந்துப் படகின் உறுப்பினர்கள், கடலில் மிதக்கும் கெத்தும் இலைகள் என சந்தேகிக்கப்படும் நான்கு கருப்பு பிளாஸ்டிக் பொட்டலங்களைக் கண்டறிந்தனர், அதன் எடை சுமார் 70 கிலோ என்றும் அண்டை நாட்டிற்கு அவை கடத்த முயன்றதாகவும் நம்பப்படுகிறது.

தாய்லாந்தின் தற்போதைய சந்தை விலை கிலோவிற்கு RM180ஐ எட்டியதால், ஒரு கிலோவிற்கு RM70 என்ற உள்ளூர் சந்தையுடன் ஒப்பிடுகையில், கெத்தும் இலைகளை கடத்தும் நடவடிக்கை மிகவும் தீவிரமாக இருப்பதாக அவர் கூறினார்.

விஷச் சட்டம் 1952 இன் பிரிவு 30 (3) இன் கீழ் இவ்வழக்கு விச்சரிக்கப்பட்டது.

தடைசெய்யப்பட்ட பொருட்களை சட்ட விரோதமாக இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், பதப்படுத்துதல் மற்றும் அப்பொருள் தொடர்பான பிறவற்றை தவறாகப் பயன்படுத்தியதற்காக, RM10,000 அபராதம் அல்லது நான்கு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here