கோலாலம்பூர்
சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாக்கிர் நாயக்கிற்கு எதிராக நடத்தபடவிருந்த மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர் சங்கர் கணேஷ் தெரிவித்திருந்தார்.
இன்று நடத்தவிருந்த அந்தப் ஆர்ப்பாட்டத்ததை நாட்டின் நலன் கருதி நிறுத்திக் கொள்ள வேண்டுமென பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டதாகவும் அடுத்த வாரம் அது சம்பந்தமாக விவாதிக்க அவர் தம்மை சந்திப்பதாகவும் தெரிவித்த காரணத்தினால், அந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டதாக சங்கர் கணேஷ் தெரிவித்தார்.
அன்வார் தம்முடன் தொடர்பு கொண்டு, தாம் அந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதாக அவர் தெரிவித்தார்.
நேற்று பிரிக்பீல்ட்சில் அனுமதி இல்லாமல் அரசின் ஜாவி-அரேபிய சித்திர எழுத்து அமலாக்கத்தை எதிர்த்து மறியல் பேரணி நடத்தப்பட்டது. ஆனால், இன்று நடத்தpபடவிருந்த பேரணியானது இந்தியர்களின் விசுவாசத்தின் மீது ஸாக்கிர் கேள்வி எழுப்பியதை எதிர்த்து நடத்தப்படவிருந்தது.