ரோந்துக் கார் தீ பற்றியது இரு போலீஸ்காரர்கள் காயம்

ஜோகூர் பாரு

காரொன்றை துரத்திச் சென்ற போலீஸ் ரோந்துக்கார் கவிழ்ந்து தீப்பற்றியதில் அதில் பயணித்த இரு போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.

அச்சம்பவம் நேற்று காலை 3.30 மணியளவில் ஜாலான் பெர்சியாரான் நூசா டாமாயில் நிகழ்ந்தது. அந்த வட்டாரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரு லான்ஸ் காப்ரல்கள், சந்தேகப்படும் அளவில் நடந்து கொண்ட காரைத் துரத்திச் சென்றுள்ளனர்.

அந்தக் காரை நிற்கும்படி கேட்டுக் கொண்டும், அது நிற்காமல் சென்றதால் அதனைத் துரத்திச் சென்றுள்ளனர்.

ஒரு வளைவில் திரும்பும்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து தீப்பற்றியதாக ஶ்ரீஅலாம் போலீஸ் தலைவர் இஸ்மாயில் டோலா தெரிவித்தார்.

கார் தீப்பற்றிய பின்னர், அந்த இரு போலீஸ்காரர்களும் காரிலிருந்து உயிர் தப்பினர். அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டது. தப்பி ஓடியிருக்கும் சந்தேக நபர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here