சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் 20 பேர் பலி

பீஜிங் சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவிலுள்ள துறைமுகத்திற்கு லைபீரிய நாட்டு கொடியுடன் கூடிய ஓசன் மெலோடி என்ற பெயரிட்ட சரக்கு கப்பல் ஒன்று வந்து நிறுத்தப்பட்டு உள்ளது. கப்பலில் மொத்தம் 42 பேர் இருந்தனர்.

இந்த நிலையில், அந்த கப்பல் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர். எனினும், கப்பலில் இருந்து 12 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டனர். மீதமுள்ள நபர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here