சர்ச்சைக்குரிய சமய போதகரான ஸாக்கிர் நாய்க்கை மீண்டும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பாத முடிவு அமைச்சரவையில் கூட்டாக எடுக்கப்பட்ட முடிவு என துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ மர்சூக்கி யாஹ்யா தெரிவித்துள்ளார்.
இது தனிநபரால் எடுக்கப்பட்ட முடிவல்ல. அமைச்சரவையில் முடிவு. அதனால் இதை விவாதிக்க ஒன்றுமில்லை.இதில் திருப்தி கொள்ளாதவர்கள் இணைந்து முடிவெடுத்தவர்களை அணுக வேண்டும். அதை விடுத்து எதற்காக போராட்டம் செய்ய வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் நாம் அனைவரையும் திருப்தி படுத்த முடியாது. அதே சமயத்தில் சிலர் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் முயல்கின்றனர் என்றார் மர்சூக்கி.