ஜப்பான் கடலில் மேலும் இரு ஏவுகணை சோதனை!

சியோல்

வடகொரியா அணு ஆயுத சோதனைகளை அடிக்கடி நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இதன்பின்பு, அமெரிக்க அரசு முறைப்படி வடகொரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.  இதன் முடிவில், அணு ஆயுத சோதனையை கைவிடுவது என அந்நாடு அறிவித்தது.

இந்நிலையில், மீண்டும் வடகொரியா அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது.  இதுபற்றி தென்கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், வடகொரிய நாடு தெற்கு ஹம்கியோங்கில் உள்ள சொந்தோக் என்ற நகரில் இருந்து இன்று காலை 6.45 மற்றும் 7.02 மணியளவில் ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியில் குறுகிய தொலைவு சென்று இலக்கை அழிக்கும் இரண்டு ஏவுகணைகளை அனுப்பி பரிசோதனை செய்துள்ளது என தென் கொரியா கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here